Times of Puducherry

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய வழி முறையில் புற்றுநோய் ஆராய்ச்சி செய்தல் பற்றிய கருத்தரங்கு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
21 Oct 2026 • 1:59 PM
seminar-on-cancer-research-in0new-method-held-in-pu

புதிய வழிகளைக் கண்டுபிடித்து புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபடுவது அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்புகளைப் புதிய சிகிச்சை முறைகளாக மாற்றுவது புற்றுநோய் மீண்டும் உருவாவதற்குப் பின்னணியில் உள்ள மூலக்கூறு வழிமுறைகளையும் எடுத்துரைக்கும் வகையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறை, உயிர் அறிவியல் பள்ளி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப்
பிரிவு (R&D Cell) ஆகியவை இணைந்து சிறப்புச் கருத்தரங்கள் நடந்தது.

இந்த கருத்தரங்கில் அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் உயிரியல் துறையின் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ஸ்ரீகாந்த் அனந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பேசியதாவது:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய வழி முறையில் புற்றுநோய் ஆராய்ச்சி செய்தல் பற்றிய கருத்தரங்கு

“கண்டுபிடிப்பிலிருந்து மருந்து உருவாக்கம் வரை:பெருங்குடல் புற்றுநோய் மீண்டும் உருவாவதில் DCLK1 மூலக்கூறின் பங்கு
மற்றும் அதன் சிகிச்சைத் திறன்” (From Discovery to Drug: How DCLKI Revealed a Druggable Engine of Colon Cancer Recurrence) என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் மீளுருவாக்கத்தை விளக்கும் ‘தேன்கூடு கருதுகோள்'(Beehive Hypothesis) மற்றும் புதிய மூலக்கூறு இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை அணுகுமுறைகள் குறித்து இந்த கருத்தரிப்பில் பேசப்பட்டன

தலைமைதாங்கிய புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு:

அறிவியல் ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கு கல்வி நிறுவனங்களுக்கிடையிலான புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களுடனான அறிவுப் பரிமாற்றமும் இன்றியமையாதவை என வலியுறுத்தினார். இளம் ஆராய்ச்சியாளர்களுக்குப் புதிய சிந்தனைகளையும் ஆராய்ச்சி ஊக்கத்தையும் வழங்குவதுடன், பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் தரத்தை மேம்படுத்தவும் துணைபுரிகின்றன எனக் குறிப்பிட்டார்.

உயிர் அறிவியல் பள்ளியின் புல முதன்மையர் பேராசிரியர் ஜோசப் செல்வின் நரம்பியல் அறிவியலுக்கும் புற்றுநோய் உயிரியலுக்கும் இடையிலான தொடர்பையும், இவ்விரு துறைகளிலும் DCLK1 புரதத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

சிறப்புரையாற்றிய பேராசிரியர் ஸ்ரீகாந்த் அனந்த் பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சைக்குப் பின்னரும் சில புற்றுநோய் செல்கள் உயிர்வாழ்ந்து, பின்னர் மீண்டும் கட்டி உருவாகக் காரணமாக இருப்பதற்கான உயிரியல் அடிப்படைகளை விளக்கினார். குறிப்பாக, புற்றுநோய் ஸ்டெம் செல்களை ஒத்த பண்புகளைக் கொண்ட செல்களுடன் தொடர்புடைய Doublecortin-like kinase 1 (DCLKI) புரதம், புற்றுநோய் மீளுருவாக்கத்தில் வகிக்கும் பங்கை விரிவாக எடுத்துரைத்தார்.

DCLKI மற்றும் அதனுடன் தொடர்புடைய மூலக்கூறு வழித்தடங்களை ஆராய்வதன் மூலம், புற்றுநோயைக் கண்டறிவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் உதவக்கூடிய புதிய உயிரியல் குறியீடுகள் மற்றும் சிகிச்சை இலக்குகளை அடையாளம் காண முடியும்
என விளக்கினார்.

மேலும், DCLK1-ஐ இலக்காகக் கொண்ட சிறிய மூலக்கூறு மருந்துச் சேர்மங்களை உருவாக்கி, அவற்றின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி முயற்சிகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்பிலிருந்து
சாத்தியமான மருந்து உருவாக்கம் வரையிலான ஆராய்ச்சிப் பயணத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்களையும் விளக்கினார்.

இத்தகைய புதிய மருந்துச் சேர்மங்களை மருத்துவப் பயன்பாட்டிற்குக் கொண்டுசெல்லும் முன், அவற்றின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் மருத்துவத்திற்கு முந்தைய ஆய்வு முடிவுகளை முறையாக மதிப்பீடு செய்வதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இச்சொற்பொழிவு, மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் புற்றுநோய் உயிரியல் துறையில் உருவாகி வரும் புதிய ஆராய்ச்சிப் போக்குகள் குறித்த ஆழமான புரிதலைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்தது. அறிவியல் ஆர்வம், விமர்சனச் சிந்தனை மற்றும் கூட்டு ஆராய்ச்சி அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் சிக்கலான உயிரியல் மருத்துவச் சவால்களுக்குத் தீர்வு காண இளம் ஆராய்ச்சியாளர்களைப் பேராசிரியர் அனந்த் ஊக்குவித்தார்.

ஆய்வக அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளை நடைமுறை மருத்துவப் பயன்பாட்டிற்குக் கொண்டு செல்வதில் அடிப்படை ஆராய்ச்சியும் பல்துறை ஒத்துழைப்பும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்த கருத்தரங்க எடுத்துக்காட்டியது உயிரித் தொழில்நுட்பத் துறைத் தலைவர் பேராசிரியர் பிரசாந்த் கே. வரவேற்புரை வழங்கினார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப்பிரிவின் இயக்குநர் பேராசிரியர் ருக்மணி ராஜகோபாலன், சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தியதுடன், புற்றுநோய் ஆராய்ச்சியில் பேராசிரியர் அனந்த் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும், அவருடன் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

நிகழ்வின் நிறைவில், உயிரித் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் ஏ. ஹன்னா ரேச்சல் வசந்தி நன்றியுரை வழங்கினார்.

புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துதல், சிறந்த ஆராய்ச்சியாளர்களுடனான அறிவுப் பரிமாற்றத்தை
ஊக்குவித்தல் மற்றும் அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்புகளை மருத்துவப்பயன்பாட்டிற்குக் கருத்தரங்கம் கொண்டுசெல்லும் .

அதிகம் படித்தவை

  • October 21, 2026 • 1:59 PM

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய வழி முறையில் புற்றுநோய் ஆராய்ச்சி செய்தல் பற்றிய கருத்தரங்கு

  • October 21, 2026 • 1:43 PM

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 75 லட்சம் தெரு விளக்கிற்கு ஒதுக்கீடு – வைத்திலிங்கம்

  • October 21, 2026 • 1:16 PM

வைரஸ் தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறை துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்பழகன் முதல்வருக்கு கோரிக்கை

  • October 21, 2026 • 12:52 PM

பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்

  • October 21, 2026 • 12:34 PM

அமைச்சர் ஆனந்த் தியாகராஜ நகர் தொகுதிகளில் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார்

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top