Times of Puducherry
மதுரை கிழக்கு, மேற்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு நெல், பயறு விதைகள் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுவதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு வேளாண் உதவி இயக்குனர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மதுரை கிழக்கு வட்டாரத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் தல்லாகுளம், ஒத்தக்கடை மற்றும் கருப்பாபூரணி துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் மதுரை மேற்கு வட்டாரத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் தல்லாகுளம், சிக்கத்தர்சாவடி மற்றும் சமயநல்லூர் ஆகிய துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் சம்பா பருவத்திற்கு தேவையான உயர் விளைச்சல்நெல் விதை வினியோகத்திற்கான சிறப்பு திட்டத்தின் கீழ் ஏ.டி.டி. 54, கோ 54, ஏ.எஸ்.டி. 21. டி.கே.எம்.15.கோ 55, ஏ.டிடி 36, ஏ.டி டி.57.டி.பி.எஸ்.5ஆகிய நெல் ரகங்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வகுகிறது.
மேலும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களான சிவன் சம்பா, மாப்பிள்ளை சம்பா நெல் ரகங்கள் 50 சதவீதமானிய விலைபிலும், சிறுதானிய விதைகள் 30 சதவீத மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. பயறு விதை தொகுப்புஇத்திட்டத்தில் மாற்றுப்பபிராக பயறு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குசான்று பெற்ற பயறு விதைகள் விளியோகத்தின் கீழ்ரூ,30, கிலோ வீதம் மானியமும்,மாற்றுப்பயிராக பயறு சாகுபடி விவசாபிகளுக்கு உளுந்து விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் நெல் ஜெயராமன் பாரம்பரிய தெல் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல்ரகங்களான தூய மல்லி மற்றும் மாப்பிள்ளை சம்பா நெல் ரகங்கள் ரூ.35, கிலோ மானியத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய அரசு திட்டமான ஆத்ம பாரத் திட்டத்தில் பயிறு விதைகள் வினியோகத்தில் ரூ.60, கிலோ மாளியத்திலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டதில் பயறு விதை தொகுப்பு விநியோக இனத்தில் ரூ.508, மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது என்று செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.