Times of Puducherry

வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
23 Oct 2026 • 6:55 PM
sacred-pole-planting-ceremony-festival-at-ranganatha-temple

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், ‘பூலோக வைகுண்டம்’ என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான வைகுந்த ஏகாதசி பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் முறைப்படி தொடங்கியுள்ளன. விழாவின் தொடக்கமாக, இன்று ‘ஸ்தம்ப ஸ்தாபனம்’ எனப்படும் முகூர்த்தக்கால் நடும் விழா திருக்கோவில் வளாகத்தில் பக்திப் பரவசத்துடன் விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு, கோவில் யானைகள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, முகூர்த்தக்காலுக்கு சிறப்புப் பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் காட்டப்பட்டு, முறைப்படி நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

இவ்வாண்டின் வைகுந்த ஏகாதசி பெருவிழா, வரும் டிசம்பர் 9 ந்தேதி அன்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. பகல் பத்து வருகிற டிசம்பர் 10-ம் தேதி அன்று தொடங்குகிறது.

வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

டிசம்பர் 19-ம் தேதி அன்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுவார். விழாவின் மிக முக்கிய நிகழ்வான வைகுந்த ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறப்பு வரும் டிசம்பர் 20-ம் தேதி அன்று அதிகாலை 5:15 மணிக்கு நடைபெறும். அன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கும்.

கைத்தல சேவை: டிசம்பர் 26 ந்தேதி அன்று மாலை 6 மணிக்கு நடைபெறும், வேடுபரி உற்சவம்: டிசம்பர் 27ந்தேதி அன்று திருமங்கை மன்னன் வேடுபரி நிகழ்வு விமரிசையாக நடைபெறும், விழா நிறைவு (நம்மாழ்வார் மோட்சம்) டிசம்பர் 31ந்தேதி அன்று காலை 10:30 மணிக்கு நம்மாழ்வார் மோட்சத்துடன் இந்த ஆண்டுக்கான வைகுந்த ஏகாதசி பெருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளைக் கோவில் இணை ஆணையர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரிவாகச் செய்து வருகின்றனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top