Times of Puducherry
துறைமுக வளாகத்தில் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுடன்,போக்குவரத்து எஸ்.எஸ்.பி திவ்யா ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரிக்கு நாளுக்கு நாள் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களை துறைமுகத்தில் நிறுத்துவது தொடர்பாக துறையின் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுடன் போக்குவரத்து எஸ்.எஸ்.பி-திவ்யா, எஸ்.பி-பக்தவச்சலம், ஆய்வாளர்- வெங்கடாசலபதி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆலோசனையின்போது வார இறுதி நாட்கள் மற்றும் எதிர்வரும் தீபாவளி, கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பின் காரணமாக துறைமுக வளாகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த அமைச்சரிடம் அனுமதி கோரிய நிலையில் பண்டிகை காலங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி கோரினர். அப்போது காவல்துறை சார்பில் கடிதம் அனுப்பிய பின்னர் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.