Times of Puducherry
புதுச்சேரி ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா அரவிந்தரின் ஒளியில் வேதங்களில் நவீன விளக்கம் என்ற கருப்பொருளை மையமாக வைத்து லிவிங் வேதா 2026 சர்வதேச மாநாடு வருகின்ற 24 மற்றும் 25 தேதி என இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதாக அரவிந்தர் ஆசிரமத்தின் உறுப்பினர் செயலர் கிஷோர் குமார் திரிபாதி தெரிவித்தார்.
இதுகுறித்து அரோபாரதி ஸ்ரீ அரவிந்த சொசைட்டி உறுப்பினர் செயலர் டாக்டர் கிஷோர் குமார் திரிபாதி கூறும் போது:
ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னையின் ஆழமான தத்துவ பார்வையாலும் ஆன்மீக போதனைகளாலும் ஊக்கமளிக்கப்பட்டு ஆன்மீகத் தேடலுக்கும் அக மாற்றத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட நூறாண்டு கால பயணத்தை முன்னிட்டு ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஸ்ருதியிலிருந்து சக்திக்கு ஸ்ரீ அரவிந்தரின் ஒளியில் வேதங்களில் நவீன விளக்கம் என்ற கருப்பொருளை மையமாக வைத்து லிவிங் வேதா 2026 புதுச்சேரி பதிப்பு சர்வதேச மாநாடு வருகின்ற அக்டோபர் 24 மட்டும் 25-ம் தேதிகளில் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.
2 நாள் நடைபெறும் மாநாட்டு விழாவில் ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டியின் தலைவர் பிரதீப் நரங், தலைமை தாங்க மாநாட்டின் புரவலர்களான கர்நாடகா மாநிலம் ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டி குழுவின் தலைவர் டாக்டர் அஜித் சப்னிஸ், மற்றும் பெங்களூர் ஸ்ரீ அரவிந்த கபாலி சாஸ்திரி வேத கலாச்சார நிறுவனத்தில் நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் ரகுநாத் ஜஹாகிதார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர் என்று குறிப்பிட்டார்.
மாநாட்டில் வேதபுரி என்ற தொன்மையான அடையாளத்துடன் மகரிஷி அகத்தியருடன் தொடர்புடைய புதுச்சேரியின் பண்பாட்டு மற்றும் ஆன்மீக பாரம்பரியம் குறித்து இந்த மாநாட்டில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த மாநாட்டை இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ அரவிந்த சொசைட்டி, ஸ்ரீ அரவிந்த கபாலி சாஸ்திர வேத கலாச்சார நிறுவனம், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம், மற்றும் மகரிஷி சாந்தி வேத வித்யா பிரதிஷ்டான் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துவதாகவும் தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.