Times of Puducherry

‘தளபதி விஜய் கல்வி உதவிக் கரம்’ திட்டத்தின் மூலம் 28 ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
23 Oct 2026 • 6:43 PM
28-students-benefited-through-thalapathi-vijay-kalvi-vuthavi-karam-scheme

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் .N. ஆனந்த், MLA தலைமையில், மதுரை அழகர் கோயில் சாலையில், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் A. விஜய் அன்பன் கல்லாணை சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்தில் இருந்து, ‘தளபதி விஜய் கல்வி உதவிக் கரம்’ திட்டத்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் 28 ஏழை மாணவர்களுக்கு ரூ.2,52,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்கவும், அவர்கள் தடையின்றித் தொடர்ந்து கல்வி பயிலவும் உதவும் நோக்கில் இத்திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

கல்வியே சமூக முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்பதை உணர்ந்து, மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் இத்தகைய நலத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் பல்வேறு மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top