Times of Puducherry
எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராகவும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் ஆளுநர் மாளிகை நோக்கி தேசிய கொடி பேரணி நடத்தினார்கள்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு எதிராகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 2-ம் தேதி முதல் நாடு முழுவதும் இளைஞர்கள் மாணவர் அமைப்பினர் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் உள்ள இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் பொதுநல அமைப்பினர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி தேசியக் கொடி பேரணி நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி காமராஜர் சிலை சதுக்கத்தில் ஒன்று கூடிய 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் தேசியக்கொடியுடன் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
அண்ணா சாலை,எஸ்.வி பட்டேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்று கொண்டிருந்த பேரணியை ஆம்பூர் சாலை சந்திப்பில் போலீசார் தடுப்பு கட்டை அமைத்து தடுத்தனர்.தொடர்ந்து அங்கேயே மாணவர்கள் அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து அவர்கள் கூறும் போது:
எஸ்ஐஆர்- க்கு எதிராக பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறோம் மத்திய அரசு உடனடியாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை கைவிட வேண்டும் தலைமை தேர்தல் ஆணையர் ஞாணேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.