Times of Puducherry

மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
23 Oct 2026 • 7:31 PM
maruthu-pandiars-225-death-anniversary-day-preparedness-process

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அக்டோபர் 27-ம் தேதி மருதுபாண்டியர்களின் 225-வது நினைவேந்தல் தினம் மற்றும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி, 64-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர், திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் 225-வது நினைவு நாள் விழா மற்றும் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழாக்களை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்திற்கு அக்டோபர் 29 மற்றும் அக்டோபர் 30 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top