Times of Puducherry

ஏ.எஃப்.டி. பஞ்சாலை ஓய்வூதிய ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் மனு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
23 Oct 2026 • 3:25 PM
aft-pensioners-arrears-due-demands-malladi

புதுச்சேரியில் உள்ள ஏ.எஃப்.டி. (AFT) பஞ்சாலையின் அனைத்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் சங்கத்தினர், தொழிலாளர் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை சட்டப்பேரவையில் சந்தித்து, நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை வழங்கக் கோரி மனு அளித்தனர்.

அந்த மனுவில், 01.01.1999 அன்று முதல் ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாகத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை வழங்க வேண்டும்.

தானே புயலுக்குப் பின்னர் அரசு முன்வந்து அறிவித்த தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகளின் அடிப்படையில், இதுவரை வழங்கப்படாமல் உள்ள மீதமுள்ள நிலுவைத் தொகையையும் ஊதியத்துடன் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த மனுவை சங்கத் தலைவர் சத்தியசீலன், செயலாளர் சின்னதுரை, பொருளாளர் ரவி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் வாழமுனி, ஜெயபாலன் ஆகியோர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் வழங்கினர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், அடுத்தகட்டமாக முதலமைச்சருடன் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top