Times of Puducherry

தீய சக்தி திமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் - என்.ஆனந்த் பேச்சு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
3 Oct 2026 • 12:50 AM
campaign-anand-adav-praveen-supporting-vinayagam

காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் என்.ஆனந்த் பேச்சு. புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக விநாயகம் போட்டியிடுகிறார் அவர் ஆதரித்து வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் நிகழ்வு தனியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மற்றும் ராஜ்யசபா எம்பி பிரவின் சக்கரவர்த்தி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் நேரு, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தீய சக்தி திமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் - என்.ஆனந்த் பேச்சு

நிகழ்ச்சியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த்:

தீய சக்தி திமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் - என்.ஆனந்த் பேச்சு

புதுச்சேரியில் நடந்து முடிந்த தேர்தலில் பணமே வழங்காமல் 28 தொகுதிகளிலும் டெபாசிட் வாங்கிய ஒரே கட்சி தமிழக வெற்றி கழகம் தான், தேர்தலுக்கு முன்னரே காங்கிரசும், தமிழக வெற்றி கழகமும் கூட்டணி அமைப்பதாக இருந்தது, நல்ல வேலையாக அது நடக்கவில்லை அதனால் தான் எங்களுடைய பலம் எங்களுக்கு தெரிய வந்தது என்றார். கடந்த தேர்தலில் போட்டியிட்ட விநாயகம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால் இடைத்தேர்தலே வந்திருக்காது, இருந்தாலும் இடைத்தேர்தலில் கைச்சின்னத்தில் போட்டியிடுகிறார் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தமிழகம் போன்று தட்டாஞ்சாவடி தொகுதியிலும் தீய சக்தி திமுக போட்டியிடுகிறது அந்த கட்சியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் ஆனந்த்..2031-ல் காங்கிரஸும் தமிழக வெற்றிக்கழகமும் கூட்டணி அமைத்து புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்றும் என்றார். தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வந்திருந்தால் தவெக கண்டிப்பாக 20 இடங்களில் வெற்றி பெற்று இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:

புதுச்சேரியில் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு டெல்லியின் மூலமுமாகவும் கவர்னர் மூலமும் செயல்படுத்தக்கூடிய கூடிய ஒரு முதலமைச்சராக தான் இங்கு இருக்க முடிகிறது. அப்படிப்பட்ட அரசியல் அமைப்பில் இருந்து புதுச்சேரி மக்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் மக்களால் தேர்ந்தெடு முதலமைச்சர் இங்கு ஆள வேண்டும், அதற்கு மாநில அந்தஸ்து அவசியம் என்றும் 2031-ல் தவெக ஆட்சி புதுச்சேரியில் அமையும் போது மாநில அந்தஸ்தும் கிடைக்கும் என்றார். 1967-ல் அண்ணா மாநில சுயாட்சியை எப்படி தமிழ்நாட்டில் வழங்கினாரோ அதேபோன்று மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி புதுச்சேரியில் உருவாக்குவோம், அதற்கான முதல் படி தான் வேட்பாளர் விநாயகத்தின் வெற்றி என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தில் ஜாதி மத அரசியலை வீழ்த்தி 108 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம், ஒரு மக்களாட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது, பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்கள் ஒரு காலத்திலும் தலைவர்களாக வர முடியாது, அரசியலில் உயரே செல்ல வேண்டுமென்றால் ஒரு வலிமை வேண்டும் அந்த வலிமை மக்களிடமிருந்து பெற வேண்டும் என்று தெரிவித்தார். நடந்து முடிந்த தேர்தலில் திமுக அதிமுக கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்தித்தார்கள், ஆனால் தனியாக நின்று தேர்தலை சந்தித்த ஒரே கட்சி தவெக, அதே வேளையில் தமிழகத்தில் பெண்களும் இளைஞர்களும் ஒன்று சேர்ந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்

வருகின்ற தேர்தல்களில் ராகுல் காந்தியும் விஜய்யும் ஒன்று சேர்ந்து பிரச்சாரம் செய்தால் ஒட்டுமொத்த பண பலத்தை வீழ்த்தி மக்கள் புரட்சி ஏற்படும் என்று தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, காங்கிரசும் தவெக- வும் அரசியல் கட்சியாக இணையவில்லை இரண்டு பெரும் சகோதரர்களாக இணைந்திருக்கிறார்கள், இந்தியாவில் ஏற்படும் மாற்றத்தை புதுச்சேரி தேர்தலில் இருந்து உருவாக்க வேண்டும்.

அடுத்த 15 ஆண்டுகளுக்கான ஆட்சியை புதுச்சேரியில் உருவாக்க வேண்டும், பிரச்சாரத்தை பெண்களிடமும் இளைஞர்களிடமும் கொண்டு செல்ல வேண்டும், அப்படி சென்றதால் தான் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட 15 அமைச்சர்கள் வீழ்த்தப்பட்டு தோல்வி அடைந்தார்கள், என்றும் தெரிவித்தார்.

அடுத்து பேசிய ராஜ்யசபா உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறவில்லை அரசியல் மாற்றம் உருவாகி இருக்கிறது அரசு அலுவலகங்களுக்கு சென்றால் பொதுமக்களுக்கு ஜூஸ் மற்றும் தண்ணீர் கொடுத்து வரவேற்று அவருடைய குறைகளை தீர்க்கும் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது, அதே அரசியல் மாற்றம் புதுச்சேரியிலும் நடைபெறும் அதற்கான முதல் படி தான் விநாயகம் வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top