Times of Puducherry

தட்டாஞ்சாவடி தொகுதியில் நாளை வாக்கு பதிவு பணம் பட்டுவாடா செய்தால் 1950 உடனடியாக புகார் தெரிவிக்கலாம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
5 Oct 2026 • 2:37 PM
regulations-voters-control-election

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. வாக்குப்பதிவு நாளன்று தொகுதிவாக்காளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் ஆண்கள்-12,575 பேரும்,
பெண்கள்-14,341 பேரும், 3-ம் பாலினத்தவர்-5 பேரும் என மொத்தம் 26,921 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 350 மாற்றுத்திறனாளிகளும்,
3 வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் உள்ளனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் 26,734 வாக்காளர் வீடுகளுக்கு வாக்காளர் தகவல் சீட்டு
வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

இடைத்தேர்தலையொட்டி 9 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 2 காணொலி கண்காணிப்புகுழுக்கள், 2 காணொலி பார்வையிடும் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தட்டாஞ்சாவடி தொகுதி எல்லைகளில் 3 இடங்களில் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக சோதனை
செய்யப்படுகின்றன.

தட்டாஞ்சாவடி தொகுதியில் நாளை வாக்கு பதிவு பணம் பட்டுவாடா செய்தால் 1950 உடனடியாக புகார் தெரிவிக்கலாம்

31 வாக்குச்சாவடிகள் தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள 31 வாக்குக்சாவடிகள் கண்காணிக்க 23 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடி பயன்படுத்துவதற்காக 140 வாக்குப்பதிவு எந்திரங்கள் தற்செயல் கலப்பு முறையில் வேட்பாளர்கள் முன்னிலையில் சோதனை செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டன. தேர்தல் நடத்தை விதிகள் அமலானது முதல் நேற்று வரை, ரூ.3 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 761 மதிப்புள்ள (2 1/2 கிலோ தங்கம்,வெள்ளி), ரூ.1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரமும், ரூ.1லட்சத்து 13 ஆயிரத்து 655 மதிப்புள்ள (282.62 லிட்டர்) மதுபானங்கள், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் (20 கிலோ) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஒரு வழக்கும், கலால்துறை விதிகளை மீறியதாக 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தட்டாஞ்சாவடி தொகுதியில் நாளை வாக்கு பதிவு பணம் பட்டுவாடா செய்தால் 1950 உடனடியாக புகார் தெரிவிக்கலாம்

85 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள்-67 பேரும், மாற்றுத்திறனாளிகள்-37 பேரும், அரசு அலுவலர்கள் 5 பேரும் தபால் வாக்கு அளித்துள்ளனர். இடைத்தேர்தலையொட்டி தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள மதுபானகடைகள் நேற்று மாலை 6 மணி முதல்
நாளை (செவ்வாய்க்கிழமை) வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தட்டான்சாவடி தொகுதியில் உள்ள 15 மதுபான கடைகள் தற்காலிகமாக ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

சிவிசில் செயலி மூலம் 5 புகார்களும், 1,950 எண்ணுக்கு 86 புகார்களும் பெறப்பட்டு அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டன.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top