Times of Puducherry

தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் ஆலோசனை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
23 Oct 2026 • 3:01 PM
constituency-development-schemes-discussion-with-malladi

தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. அசோக் ஆனந்த் அவர்கள், பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. மல்லாடி கிருஷ்ணாராவ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில், தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பொதுப்பணித்துறை சார்ந்த பணிகள், சாலை வசதிகள், மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களைச் சீரமைத்தல் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், தொகுதி மக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, அவற்றைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top