Times of Puducherry
தட்டாஞ்சாவடி தொகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கை எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் உத்தரவின் பேரில் துரித நடவடிக்கை கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரம்.
தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும், சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் அவர்களின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை சார்பில் கழிவுநீர் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த காலங்களில் பெய்த மழையின்போது சில பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் சிரமங்களைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் அறிவுறுத்தினார்.
அதன்படி, தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் தேங்கியிருந்த மண், குப்பைகள் மற்றும் நீரோட்டத்திற்குத் தடையாக இருந்த கழிவுகளை அகற்றி, வாய்க்கால்களைத் தூர்வாரும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
வாய்க்கால்களில் நீர் தடையின்றிச் செல்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி, கனமழை பெய்யும் நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் அபாயத்தைக் குறைப்பதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். மேலும், மழைநீர் விரைவாக வெளியேறுவதற்குத் தேவையான வடிகால் வசதிகளைச் சீரமைப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மழைக்காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை முன்கூட்டியே தவிர்க்கும் வகையில், தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் நோக்கில், மழைக்காலம் முழுவதும் நிலைமையைக் கண்காணித்து, தேவையான இடங்களில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.