Times of Puducherry

காணாமல் போன சிறுமியை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
19 Oct 2026 • 11:45 PM
police-dept-warns-not-to-spread-false-opinion-in-social-media

செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கின்றது. இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

விழுப்புரம் மாவட்ட காவல்துறை விழுப்புரம் மாவட்டம், செஞ்சி உட்கோட்டம், சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலம்பூண்டி, நடுப்பட்டு கிராமத்தில் காணாமல் போன 6 வயது சிறுமியை கண்டுபிடிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் காவல்துறையின் நடவடிக்கைகள் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி உட்கோட்டம், சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
ஆலம்பூண்டி, நடு பட்டு கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த 12.10.2026 அன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து காணாமல் போனது தொடர்பாக, சிறுமியின் தாயார் பவானி அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் உடனடியாக Girl Missing வழக்குப்
பதிவு செய்யப்பட்டு. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காணாமல் போன சிறுமியை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை

மேற்படி சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, காணாமல் போன சிறுமியை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கண்டுபிடிக்கும் நோக்கில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் தீவிர புலன்விசாரணை மற்றும் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சிறுமி காணாமல் போனதற்கான காரணம் மற்றும் அவரைக் கண்டறிவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பாகக் கிடைக்கும் தகவல்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சிறுமியைத் தேடும் பணி ஒரு பகுதியாக, ஆலம்பூண்டி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகள், மலைப்பகுதிகள், பாறைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, மேற்படி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய நபர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களது பின்னணி மற்றும் நடமாட்டம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சிறுமி காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களைத் திரட்டும் நோக்கில், சுமார் 600 நபர்களின் செல்போன் எண்களை பல்வேறு கோணங்களில் ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல், ஆலம்பூண்டி கிராமம் மற்றும் அதன் அருகிலுள்ள CCTV பதிவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தனிப்படையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு. காணாமல் போன சிறுமியை விரைந்து கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்படி சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பாகவும், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இத்தகைய
தகவல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பொதுமக்கள் பகிர்வதைத் தவிர்க்கவேண்டும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top