Times of Puducherry

விலையில்லா ஆட்டோ :விண்ணப்பப் படிவங்கள் வழங்கல்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
19 Oct 2026 • 11:55 PM
free-auto-obtaining-application-issued-by-anand

சென்னை, தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான N.ஆனந்த், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்குச் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், சொந்தமாகத் தொழில் செய்ய விருப்பமுள்ள தகுதியான நபர்களுக்கு விலையில்லா ஆட்டோக்கள் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக, இன்று தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விலையில்லா ஆட்டோ பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் நபர்களில் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விலையில்லா ஆட்டோக்கள் வழங்கப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்கள் சுயதொழில் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடைய வாய்ப்பளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top