Times of Puducherry

ரூ.4 கோடியில் தயாரான 'விஸ்​டாடோம்’ பெட்டி அக்​.22 முதல் மதுரை - குரு​வாயூர் விரைவு ரயி​லில்: முன்பதிவு துவங்கியது

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
19 Oct 2026 • 4:10 PM
vistadome-coaches-reservation-opening-from-madurai-guruvayur

தெற்கு ரயில்​வே​யில் முதல்​முறை​யாக கண்​ணாடிக் கூரை கொண்ட ‘விஸ்​டாடோம்’ பெட்டி அக்​.22 முதல் மதுரை – குரு​வாயூர் விரைவு ரயி​லில் இணைத்து இயக்​கப்பட உள்​ளது. சென்னை பெரம்​பூரில் உள்ள ஒருங்​கிணைந்த ரயில் பெட்டி தொழிற்​சாலை​யில் (ஐசிஎஃப்) சுற்​றுலாப் பயணி​களை கவரும் வித​மாக, கடந்த 2017-ம் ஆண்டு முதல் எல்​எச்​பி, ‘விஸ்​டாடோம்’ சுற்​றுலா ரயில் பெட்​டிகள் தயாரிக்​கப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில், தெற்கு ரயில்​வே​யில் முதல்​முறை​யாக, மதுரை – குரு​வாயூர் விரைவு ரயி​லில் அக்​.22-ம் தேதி முதல் ஜன.15-ம் தேதி வரை கண்​ணாடிக் கூரை கொண்ட ‘விஸ்​டாடோம்’ பெட்டி பயன்​பாட்​டுக்கு வர உள்​ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது:

ரூ.4 கோடியில் தயாரான 'விஸ்​டாடோம்’ பெட்டி அக்​.22 முதல் மதுரை - குரு​வாயூர் விரைவு ரயி​லில்: முன்பதிவு துவங்கியது

அழகிய மலைப் பகு​தி​கள், அருவி​கள் போன்ற இயற்கை அழகுகளை பயணி​கள் முழு​மை​யாக கண்டு ரசிக்​கும் வகை​யில் விஸ்​டாடோம் பெட்டி வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த பெட்டியில் பெரிய கண்​ணாடி ஜன்​னல்​களோடு, சுழலும் இருக்​கைகள் இருப்பதால் 360 டிகிரி கோணத்​தில் இயற்​கையை ரசிக்க முடி​யும். ஒரு பெட்​டி​யில் 44 இருக்​கைகள் மட்​டுமே இருக்​கும். வைஃபை, ஜிபிஎஸ், உள்​ளிட்ட தொழில்​நுட்ப வசதி​களும் இதில் உண்​டு. ரூ.4 கோடி செல​வில் இப்​பெட்டி உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

தெற்கு ரயில்​வே​யில் முதல்​முறை​யாக, மதுரை – குரு​வாயூர் விரைவு ரயி​லில் (16327) அக்​.22-ம் தேதி முதல் விஸ்​டாடோம் பெட்​டி, பயணி​களின் பயன்​பாட்​டுக்கு வரு​கிறது. இது ஜன.15-ம் தேதி வரை 4 மாதங்​களுக்கு சோதனை அடிப்​படை​யில் இயக்​கப்​படும். வாரத்​தில் 4 நாட்​கள் (வி​யாழன், வெள்​ளி, சனி, ஞாயிறு) இப்​பெட்டி இணைத்து இயக்​கப்​படும். மறு​மார்க்​கத்​தில் (குரு​வாயூர் – மதுரை) அக்​.23-ம் தேதி முதல் ஜன. 16-ம் தேதி வரை அமலில் இருக்​கும். இதுவாரத்​தில் 4 நாட்​கள் (வெள்​ளி, சனி, ஞாயிறு, திங்​கள்) பெட்டி இணைத்து இயக்​கப்​படும்.

தமிழகம் – கேரளா எல்​லை​யான செங்​கோட்டை – புனலூர் மலைப்​பாதை, ஆரி​யங்காவு கணவாய் வழி​யாகச் செல்​லும்​போது, மேற்​குத் தொடர்ச்சி மலை​யின் அழகிய இயற்​கைக் காட்​சிகளை ரசிக்கலாம். குறிப்பாக, செங்கோட்டையில் இருந்து தென்மலை செல்லும் வழியில் பருவமழை காலங்களில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட உயரமான 13 கல் வளைவு பாலங்கள், பள்ளத்தாக்குகள், மலைச் சுரங்கங்கள், மூலிகை செடிகள் நிறைந்த அடர்ந்த மழைக் காடுகள் வழியாக ரயில் செல்லும் போது மனதுக்கு அமைதி, புத்துணர்ச்சி கிடைக்கும் வகையில் தென்னக ரயில்வே வழி செய்துள்ளது.

இந்த பெட்​டி​யில் அடிப்​படைக் கட்​ட​ணம் ரூ.515-ல் இருந்து தொடங்​கு​கிறது. மதுரை​யில் இருந்து குரு​வாயூர் வரை முழு​மை​யாகப் பயணிப்​ப​தற்​கான மொத்​தக் கட்​ட​ணம் ரூ.1,875 ஆகும்​ என அதி​காரி​கள்​ தெரிவித்துள்ளனர். இவற்றிற்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top