Times of Puducherry

பிரான்ஸ் நாட்டில் தொடர் வன்முறை 1800 பேர் கைது:போராட்டக்காரர்கள் தாக்கியதில் 400 மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
19 Oct 2026 • 5:53 PM
continuos-violance-in-france-morethan-1800-got-arrested

விலைவாசி உயர்வு மற்றும் பள்ளிச் சீர்திருத்தங்களுக்கு எதிராக செப்டம்பர் மாதம் முதலே மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் போல முக்கிய போராட்ட களமான பாரீஸ் சதுக்கத்தில் நுழைந்து போராடுவதற்காக நேற்று ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். போராட்டக்காரர்களைப் போலீசார் தடுத்தனர்.

இதில் லிமோஜஸ் (Limoges) நகரில் அமைந்திருந்த 143 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க புகழ்பெற்ற நகர மண்டபம் (Town Hall) போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இதில் அதன் பிரமாண்ட கடிகாரக் கோபுரம் இடிந்து விழுந்து சாம்பலாகியுள்ளது. மேலும், லியோன் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா அலுவலகக் கட்டிடமும் தீப்பற்றி எரிந்தது.

பிரான்ஸ் நாட்டில் தொடர் வன்முறை 1800 பேர் கைது:போராட்டக்காரர்கள் தாக்கியதில் 400 மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர்

வன்முறையைக் கட்டுப்படுத்த கலகத் தடுப்புப் போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களைப் பயன்படுத்தினர். நாடு முழுவதும் இதுவரை 1800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதல்களில் சுமார் 400 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் தொடர் வன்முறை 1800 பேர் கைது:போராட்டக்காரர்கள் தாக்கியதில் 400 மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர்

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஆங்காங்கே சிதறி ஓடினர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சில தீவிர இடது சாரி வன்முறைக் குழுக்களும், சமூகவிரோதிகளும்போராட்டத்தில் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் கடைகளைச் சூறையாடி, அரசு நிறுவனங்களைத் தீக்கிரையாக்கியதால் ஏற்பட்ட மோதலில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.

பிரான்ஸ் நாட்டில் தொடர் வன்முறை 1800 பேர் கைது:போராட்டக்காரர்கள் தாக்கியதில் 400 மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர்

வன்முறையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இதுவரை 1,800 பேர் கைது செய்யப்பட்டனர். அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
அவசர ஆலோசனைக் கூட்டத்தைக்கூட்டியுள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top