Times of Puducherry
தஞ்சாவூர் மாவட்டம் குடந்தை அருகே உடையாளூரில் திரைப்பட இயக்குனர் மோகன்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:
பேரரசர் ராஜராஜ சோழனின் சமாதி என்று அழைக்கப்படும் உடையாளூரில் உள்ள இடத்தை பல ஆண்டுக்கு முன்பு தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த 8 ஆண்டுகளாக ராஜராஜசோழனின் சதயவிழாவில் பங்கேற்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ராஜராஜசோழனுக்கு, இந்த இடத்தில் தமிழக அரசு மணி மண்டபம் கட்டி அரசு விழாவாக நடத்த வேண்டும். குடந்தையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகப்பெருவிழா வரும் 2028ம் ஆண்டு வருவதால் இவ்விழா தொடர்புடைய சைவ மற்றும் வைணவக் கோயில்களில் மகாகும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
மகாமகப் பெருவிழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துகொள்வதாக கூறப்படும் நிலையில், தமிழக அரசு மெத்தனமாக இருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. எனவே தமிழக அரசு மகாமகப் பெருவிழாவுக்கு என்று தனியாக ஒரு அதிகாரியை நியமித்து முன்னேற்பாட்டு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.