Times of Puducherry
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி புதுச்சேரின் ஒரு அடையாளமான பழமையான திரையரங்கம் நியூட்டன் திரையரங்கம் சுற்றுச்சூழல் மற்றும் நகராட்சி நிர்வாகத்தால் இன்று அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து உருளையான்பேட்டை தொகுதி எம் எல் ஏ நேரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை இணைப்பு பகுதியில் நியூட்டன் தியேட்டர் உள்ளது. இதன் சுற்று சுவர் மிகவும் பழுதடைந்தும், சேதமடைந்தும், ஆங்காங்கே விரிசல்கள் விட்டும் சுவர்களின் நடுவில் மரங்கள் வளர்ந்து இருந்தது.
ஏதேனும் மழை புயல் என்றால் இந்த சுற்று சுவர் விழும் அபாய நிலை இருந்தது மேலும் இப்பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ள பகுதியாகும். இதனை அறிந்த உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேயம் மக்கள் கழக தலைவருமான நேரு(எ) குப்புசாமி MLA அவர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி நியூட்டன் தியேட்டரின் முன் பகுதி மற்றும் சுற்றுப்பகுதி சுவர் களை அகற்றி தருமாறு நகராட்சிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதி இருந்தார்.
அதன் நடவடிக்கையாக தற்போது புதுச்சேரி நகராட்சி மூலம் நியூட்ரான் தியேட்டரின் சுற்று சுவர் இடிக்கப்படுகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.