Times of Puducherry

வெள்ள நிவாரணம் மைய அலுவலகத்தை காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் நாளை திறந்து வைக்கிறார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
22 Oct 2026 • 4:30 PM
flood-relief-camp-opening-by-manik-tagore-tomorrow

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 3 நபர்களைக் கொண்ட வெள்ள நிவாரண உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சத்தியமூர்த்தி பவனில் 24 மணி நேரம் இயங்கக்கூடிய வெள்ள நிவாரணம் மையம் அலுவலகத்தை காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் நாளை திறந்து வைக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஊடகப் பொறுப்பாளர் கோபண்ணா தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

சென்னை மற்றும் தமிழகமெங்கும் தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவமழையினால் பல இடங்களில் மழை வெள்ளத்தினால் ஏழை, எளிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 3 நபர்களைக் கொண்ட வெள்ள நிவாரண உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ள நிவாரணம் மைய அலுவலகத்தை காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் நாளை திறந்து வைக்கிறார்

இக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக மக்களுக்கு உதவிடும் வகையில் பணிகளை மேற்கொள்வார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வெள்ள நிவாரண பணிக்குழு 24 மணி நேரமும் செயல்படுகின்ற வகையில் நிவாரண உதவி மையம் அமைக்கப்படுகிறது.

அதனை 23.10.2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் .ப, எம்.பி. திறந்து வைக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் பொருட்டு குடிதண்ணீர், உணவுப் பொருட்கள், மருந்துகள்
மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாராக இருக்கும் வகையில் இந்நிவாரண மையம் செயல்படும்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக இரண்டு படகுகள் உட்பட பல்வேறு விதமான நிவாரண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் இக்குழுவின் தலைவராக இருந்து செயல்படுவார்.

மேலும், நிவாரணப் பணிகளை முழுவீச்சில் செயல்படுத்த கீழ்கண்ட குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக சென்னை மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.எஸ். திரவியம் அவர்கள் செயல்படுவார். உறுப்பினர்களாக மாவட்டத் தலைவர்கள் .

மாதரம்மாகனி, . கராத்தே ஆர். செல்வம், எம்.எம்.டி.ஏ. கோபி, .கே.வி. திலகர், எம்.சி., ஜோதி பொன்னம்பலம், டி. விஜய்சேகர், காங்கை குமார், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் சிவராஜசேகரன், எம்.சி., ஜெ. டில்லிபாபு, எம்.சி., ஏ. தீர்த்தி, எம்.சி., பி. சங்கீதா, எம்.சி., ஆர். சுரேஷ்குமார், எம்.சி.,சுமதி, எம்.சி., எம். பானுபிரியா, எம்.சி., எஸ். தனலட்சுமி, எம்.சி., திருமதி. சுகன்யா, எம்.சி., அமிர்தா வர்ஷினி, எம்.சி., டி. சுபாஷினி, எம்.சி., ஆகியோர் செயல்படுவார்கள். இதற்கு உதவிடும் வகையில் அலைபேசி எண்கள் 7871004668, 8681004204 அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிவாரணப்பணிகளில் பங்கு கொண்டு உதவி செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க
நண்பர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தங்களால் இயன்ற பொருளுதவிகளை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் மட்டும் வழங்கலாம்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top