Times of Puducherry

திருக்கோவிலுார் செவலை ரோட்டில் உள்ள சமூக நல விடுதியில் கலெக்டர் பத்மஜா திடீர் ஆய்வு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
22 Oct 2026 • 4:18 PM
collector-padmaja-inspected-community-welfare-hostel-thirukovilur

திருக்கோவிலுார் அடுத்த செவலை ரோட்டில் உள்ள சமூக நல விடுத்தில் சமையல் செய்யாமல் இருந்தது, ஆய்வில் தெரியவந்ததால் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதா? என சமையளரிடம் கேட்க, குழம்பு வைத்து பரிமாறப்பட்டதாகவும் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று விட்டதாக தெரிவித்தார். அடுப்பில் கரி, தண்ணீர் படாமல் எப்படி சமைத்தீர்கள் எனவும், ஆயுத பூஜைக்கு போடப்பட்ட பூசை அப்படியே இருந்ததை சுட்டிக்காட்டி சமையல் செய்ததற்கான தடயங்களே இல்லையே என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சமையல் பாத்திரங்களை பார்வையிட்ட போது சமையல் செய்ததற்கான எந்த தடயங்களும் அங்கு தென்படவில்லை.

எத்தனை மாணவர்கள் சாப்பிடுகிறார்கள் என்ற கேள்விக்கும் சரியான பதில் இல்லை, வார்டன் இல்லாத நிலையில் சமயளர் மட்டுமே பதிலளித்தார். மாணவர்களின் வருகையை குறிக்கும் பயோமெட்ரிக் இயந்திரத்தை பார்வையிட்ட கலெக்டர், அது செயல்படாதது குறித்தும் கேள்வி எழுப்பினார். மாணவர்கள் அங்கு தங்கியதற்கோ, சாப்பிட்டதற்கோ எந்த தடயங்களும் இல்லாத சூழலில் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் படித்தவை

  • October 22, 2026 • 5:02 PM

திருக்கோவலூரில் பிறந்த மாமன்னர் இராஜராஜ சோழரின் திருவுருவச்சிலையும் மணிமண்டபமும் அமைக்க அரசுக்கு தமிழ்ச் சங்கம் கோரிக்கை

  • October 22, 2026 • 4:47 PM

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது – 45 கிராம் கஞ்சா பறிமுதல்

  • October 22, 2026 • 4:39 PM

கடலூர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது – தங்க நகைகள், கார்கள், இருசக்கர வாகனம் மற்றும் ரொக்க பணம் பறிமுதல்

  • October 22, 2026 • 4:30 PM

வெள்ள நிவாரணம் மைய அலுவலகத்தை காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் நாளை திறந்து வைக்கிறார்

  • October 22, 2026 • 4:18 PM

திருக்கோவிலுார் செவலை ரோட்டில் உள்ள சமூக நல விடுதியில் கலெக்டர் பத்மஜா திடீர் ஆய்வு

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top