Times of Puducherry
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த், உலக சாதனை படைத்த இளம் மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் இஷான் எஸ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னையைச் சேர்ந்த 13 வயது இளம் மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் இஷான் எஸ் பால்க் ஜலசந்தியில் 64 கிலோமீட்டர் தொலைவிலான இருவழிக் கடல் நீச்சலை 18 மணி நேரம் 50 நிமிடங்களில் வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.
S14 பிரிவில் இச்சாதனையை நிகழ்த்திய முதல் மற்றும் இளம் வயது நீச்சல் வீரராக இஷான் சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை முயற்சியை லண்டனைச் சேர்ந்த World Book of Records, London அமைப்பின் சார்பில் அதிகாரி அன்கிதா ஷா அங்கீகரித்துள்ளார்.
பிறப்பிலேயே அறிவுசார் குறைபாடு, ஆட்டிசம் மற்றும் ADHD பாதிப்புகளுடன் இருந்தாலும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் நீச்சல் விளையாட்டில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார் இஷான். ஏற்கெனவே கொச்சியில் 10 கி.மீ. தொலைவுக்கும், கோவாவில் 5 கி.மீ. தொலைவுக்கும் கடல் நீச்சல் மேற்கொண்டு தனது திறமையை நிரூபித்துள்ளார்.
தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில அளவிலான S14 பிரிவு பாரா நீச்சல் போட்டிகளிலும் சிறந்து விளங்கும் இஷான், கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் எட்டு தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், சாதனை வீரர் இஷான் எஸ் மற்றும் அவரது தாயார் திருமதி ஷர்மிளா ஆகியோர் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த், அவர்களை நேரில் சந்தித்தனர்.
இளம் வயதிலேயே கடல்சார் நீச்சலில் இத்தகைய மகத்தான சாதனையைப் படைத்த இஷானைப் பாராட்டிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அவரது தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் சாதனை மனப்பான்மை அனைவருக்கும் ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்திலும் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.