Times of Puducherry

அர்னாப் புயல் எதிரொலி - எண்ணூர் கடற்கரை சாலையில் கடல் நீர் புகுந்தது

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Oct 2026 • 11:07 PM
sea-water-enters-ennur-coastal-road

அர்னாப் புயல் எதிரொலி – எண்ணூர் கடற்கரை சாலையில் கடல் நீர் புகுந்ததால் ராமகிருஷ்ணா நகரில் இருந்து வரும் வாகனங்கள் கத்திவாக்கம் பாலம், முருகர் கோவில் வழியாக செல்ல போலீசார் அறிவுறுத்தல். அர்னாப் புயலின் தாக்கத்தால் சாவித்திரி நகரில் கடல் நீர் 3 முதல் 4 அடி வரை உயர்ந்து, நிவாரண முகாமின் தரைத்தளத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்காக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அதிகாரிகளுடன் இணைந்து சாவித்திரி நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஏனாம் பகுதியில் பல இடங்களில் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்ததால், சாவித்திரி நகருக்குச் செல்லும் வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அர்னாப் புயல் எதிரொலி - எண்ணூர் கடற்கரை சாலையில் கடல் நீர் புகுந்தது
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top