Times of Puducherry

ரூபாய் 41 க்கு மின்சார கொள்முதல் சீப் சி எம் சீழ் பிடித்த ஆட்சி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் தாக்கு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Oct 2026 • 10:55 PM
cheap-cm-condemns-lop-for-raising-rs.41-per-unit

சீப் சி. எம் சீழ் பிடித்த ஆட்சி: வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரம் உங்க ரூபாய் 41 க்கு வாங்குவதற்கு என்ன அவசியம் என்ன என திமுகஎதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?

நடத்துவது ஆட்சியும் இல்லை – செய்வது நிர்வாகமும் இல்லை – ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?.

இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.

இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top