Times of Puducherry
புதுச்சேரி பழைய ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், 4,950 தேவையற்ற கோப்புகள் கண்டறியப்பட்டன என இந்திய உணவு கழகம் புதுச்சேரி கூட்டம் அறிவித்துள்ளது இதுகுறித்து இந்திய உணவு கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
சிறப்பு இயக்கம் 6.0: புதுச்சேரி கோட்ட அலுவலகத்தில் 4,950 தேவையற்ற கோப்புகள் கண்டறியப்பட்டு, 1,500 சதுர அடி இடவசதி விடுவிப்பு . இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான நிறுவனத் தூய்மை மற்றும் நிறுவனத் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் (FCI) கோட்ட அலுவலகம், ‘சிறப்பு இயக்கம் 6.0’ (Special Campaign 6.0) திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பழைய ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், 4,950 தேவையற்ற கோப்புகள் கண்டறியப்பட்டன. ஆவணங்களையும் அவற்றுடன் தொடர்புடைய தேவையற்ற பொருட்களையும் விதிமுறைகளின்படி முறையாக அகற்றுவதற்கு விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளின் மூலம் அலுவலகத்தில் 1,500 சதுர அடி இடவசதி விடுவிக்கப்படுகிறது. மேலும், அகற்றப்படும் பொருட்கள் மூலம் அரசுக்கு சுமார் ₹42,000 வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்புகள் மற்றும் ஆவணங்களை முறையாக நிர்வகித்தல், இடவசதியை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன், அலுவலக வளாகத்தைத் தூய்மையாகவும் பசுமையாகவும் பராமரிப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கிடங்குகளில் தூய்மை மற்றும் மரம் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சுமார் 55 ஆர்வமுள்ள பணியாளர்கள்பங்கேற்று, அலுவலக வளாகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் 15 மரக்கன்றுகளை நட்டனர்.
2026 அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெறும் ‘சிறப்பு இயக்கம் 6.0’, மத்திய அரசின் அனைத்து கள அலுவலகங்களிலும் இடவசதியைச் சிறப்பாகப் பயன்படுத்துதல், பணிச் சூழலை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. தூய்மையான, அதிகத் திறன் கொண்ட மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பணியிடத்தை உருவாக்குவதற்கான இவ்வியக்கத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப, இந்திய உணவுக் கழகத்தின் புதுச்சேரி கோட்ட அலுவலகம் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.