Times of Puducherry
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத புதுச்சேரி அரசை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்
புதுச்சேரி சுதேசி மில் அருகில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) மாநில குழு சார்பில், மாநிலத் தலைவர் த.கோ. முனியம்மாள் தலைமையில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் மீதும் ஏற்றப்பட்டுள்ள தாங்க முடியாத விலைவாசி உயர்வை உடனே கட்டுப்படுத்து, பண்டிகைக் கால பஜார்களை பகுதிவாரியாக உடனடியாகத் திறந்திட வேண்டும், கடந்த 9 மாத காலமாக ரேஷன் கடைகளில் நிறுத்தப்பட்டுள்ள இலவச/மானிய அரிசியை உடனே வழங்கிட வேண்டும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள டிஜிட்டல் காயின் திட்டத்தை அறவே நீக்கிவிட்டு, ரேஷன் கடைகள் மூலமாகவே அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் விநியோகித்திட வேண்டும் உள்ளடக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத புதுச்சேரி அரசை கண்டித்து பெண்கள் அமைப்பினர் காய்கறிகளை மாலையாக போட்டும் மளிகை கடை அமைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தாறுமாறாக வெளியேறி வருகிறது. இதனால் அடித்தர மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
எனவே விலைவாசியை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர் இந்த நிலையில் அரசு நடவடிக்கை எடுக்காததால் புதுச்சேரியில் உள்ள பெண்கள் அமைப்பினர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத புதுச்சேரி அரசை கண்டித்து சுதேசி பஞ்சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டும் மளிகை உள்ளிட்ட பொருட்களை கடையாக வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பெண்கள் அமைப்பினர் சுமார் நூற்றுக்கும் மேற்கொண்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.