Times of Puducherry

3-வது முறையாக ஐபிஎல் Vs பிஎஸ்எல்: ஒரே நேரத்தில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் லீக் தொடர்கள்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
8 Oct 2026 • 6:11 PM
IPL vs PLS Clash 3rd Time On 2027

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் போலவே இலங்கை, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்க, பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் என பல நாடுகளில் நடக்கிறது. இதில் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு நாடுகளில் தொடர் நடைபெறும் நிலையில், 2027-ம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் லீக் தொடர்கள் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2027-ம் ஆண்டுக்கான 12வது சீசன் தேதிகளை உறுதி செய்ததைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக பி.எஸ்.எல்., இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருடன் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது.

பி.எஸ்.எல். தொடரில், 6 அணிகள் விளையாடி வந்த நிலையில், 2026-ஆம் ஆண்டில் 8 அணிகளாக உயர்தப்பட்டுள்ளது. அதன்பிறகு, 2-வது ஆண்டாக அனைத்து 8 அணிகளும் பங்கேற்கும் பி.எஸ்.எல் 12வது தொடர், மார்ச் 18 முதல் மே 2, 2027 வரை நடைபெறவுள்ளது. செப்டம்பர் 1 அன்று லண்டனில் நடைபெற்ற பி.எஸ்.எல். நிர்வாகக் குழுக் கூட்டத்தில், 8 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த காலக்கட்டம் இறுதி செய்யப்பட்டது.

இந்த முடிவு, பி.எஸ்.எல். தொடரை மீண்டும் இந்தியாவின் ஐ.பி.எல் நடைபெறக்கூடிய அதே காலக்கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இவ்விரு தொடர்களும் ஏற்கனவே 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் மார்ச்-மே மாத காலக்கட்டத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளதால், வீரர்கள், ரசிகர்கள், நேரலை ஒளிபரப்பு கவனம் மற்றும் வணிக ரீதியான ஈர்ப்பு ஆகியவற்றில் போட்டி உருவாகியுள்ளது.

இரண்டு லீக்குகளின் அளவையும் ஒப்பிடும் போது, இந்த நேரடி மோதல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. வணிக ரீதியாக ஐபிஎல் உலகின் மிகப்பெரிய பிரான்சைஸ் டி20 தொடராக நீடிக்கும் வேளையில், பாகிஸ்தானின் முதன்மையான உள்ளூர் கிரிக்கெட் தொடராக ஐ.பி.எல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. 2026-ல், பி.எஸ்.எல் தொடர் மார்ச் 26 முதல் மே 3 வரை நடைபெற்றது, அதே நேரத்தில் ஐ.பி.எல் மார்ச் 28 முதல் மே 31 வரை நடைபெற்றது.

ஒரே நேரத்தில் தொடர்கள் நடைபெற்றதால், பெரும்பாலான நாட்களில் இரு லீக்குகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதில் கடும் போட்டியைச் சந்தித்தன. 2027 பி.எஸ்.எல் தொடர் மீண்டும் ஐபிஎல் உடன் நீண்ட நாட்களுக்கு மோதும் சூழலை உருவாக்கக்கூடும். பிசிசிஐ (BCCI) இன்னும் தனது இறுதி அட்டவணையை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், தற்போதைய ஐபிஎல் 2027 திட்டமிடலின்படி இத்தொடர் மார்ச் 10 முதல் மே 15 வரை நடைபெறும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், பி.எஸ்.எல் தொடரைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மிகுந்த நம்பிக்கையுடன் இந்த சீசனைத் தொடங்குகிறது. 2026 பதிப்பில் 8 அணிகள் கொண்ட வடிவம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், வீரர்களின் தேர்வு முறையான டிராஃப்ட்டிற்குப் பதிலாக முதன்முறையாக ஏல முறை கொண்டுவரப்பட்டது. இறுதிப்போட்டியில் புதிதாகக் களமிறங்கிய கிங்ஸ்மேன் அணியை வீழ்த்தி பெஷாவர் சால்மி சாம்பியன் பட்டம் வென்றது.

மேலும் கடாபி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியைக் காண 32,461 ரசிகர்கள் வருகை தந்து சாதனையைப் படைத்தனர். தேதிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை ஐபிஎல் தொடருடன் இணைந்து தொடங்கவுள்ள புதிய சீசனுக்கான ஆயத்தங்களை எட்டு அணிகளும் தொடங்குவதற்கு முன், வீரர்களைத் தக்கவைத்தல், நேரடி ஒப்பந்தங்கள், வர்த்தகம் மற்றும் ஏலம் ஆகியவற்றின் மீது கவனம் திரும்பும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top