Times of Puducherry

351 ரன்கள் குவித்தும் தோல்வி: இந்திய அணிக்கு ஷமி, புவனேஷ்வர் மீண்டும் திரும்ப வேண்டும்: முன்னாள் வீரர் கருத்து

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
5 Oct 2026 • 5:58 PM
Hanuma Vihari Indian Team Bhuvaneshwar and Shami re entry

2027 உலகக்கோப்பைக்கு முன்பாக, இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹார்திக் பாண்டியாவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று எச்சரித்துள்ள ஹனுமா விஹாரி, புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமியை மீண்டும் ஒருநாள் போட்டி (ODI) அணியில் சேர்க்க வேண்டும் என்று இந்திய அணியை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து விஹாரி தனது யூடியூப் சேனலில் பேசியபோது, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்ற இந்திய அணி, மூன்றாவது ஒருநாள் போட்டியில் 351 ரன்களை குவித்தும் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதற்கு முந்தைய போட்டியில் 405 ரன்கள் அடித்ததைத் தொடர்ந்து, இந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 48.2 ஓவர்களில் இந்த இலக்கை எட்டியது.

வழக்கமாக ஒருநாள் போட்டிகளில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படுவதாலும், முகமது சிராஜ் புறக்கணிக்கப்படுவதாலும் அல்லது ஃபார்மில் இல்லாததாலும், பிளாட் ட்ராக்குகளில் (flat tracks) இந்திய அணி பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருகிறது. பும்ரா, சிராஜ் மற்றும் ஷமி ஆகியோரின் கூட்டணி 2023-ல் பவர் பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தும் சிக்கலுக்குத் தீர்வாக இருந்தது, ஆனால் அந்தப் பிரச்சனை இப்போது மீண்டும் திரும்புவது போல் தெரிகிறது. இதனால் புவனேஷ்வர் குமாரை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

என்னுடைய பார்வையில், அவர் இப்போதும் நாட்டின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். அதை அவர் ஐபிஎல் தொடரில் நிரூபித்து வருகிறார். குறிப்பாக புதிய பந்தில் இந்தியாவுக்குத் தேவையான அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் புவனேஷ்வர் வழங்க முடியும். நீங்கள் பும்ரா மற்றும் ஹார்திக்கை மட்டுமே நம்பியிருக்க முடியாது. காயம் ஏற்படும்பட்சத்தில் உங்களிடம் பேக்கப் (backup) இருக்க வேண்டும். அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்றுதான் நான் சொல்வேன்.

புவனேஷ்வர் மற்றும் ஷமியை மீண்டும் அழைத்துக் வாருங்கள். “அனுபவம் இருக்கும்போது உங்களுக்கு ஒரு பாதுகாப்பு இருக்கும். உங்களுக்கு ஒரு விக்கெட் தேவைப்படும்போது, நீங்கள் அவர்களிடம் செல்லலாம்; அவர்கள் அந்த வேலையைச் செய்து முடிப்பார்கள். உங்களுக்கு ஸ்திரத்தன்மை தேவை, அனுபவம் எப்போதும் கைக்கொடுக்கும்.

36 வயதான புவனேஷ்வர், காயங்களால் பாதிக்கப்பட்ட பிறகு, கடைசியாக 2022-ல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 2025 மற்றும் 2026 சீசன்களில் 30 போட்டிகளில் 45 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, அவர் இப்போது ஒரு பிரபலமான தேர்வாக மாறியுள்ளார்.

‘அணி பின்னோக்கிச் செல்கிறது’

உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஓராண்டிற்கும் குறைவாகவே உள்ள நிலையில், 350-க்கும் அதிகமான ரன்களைத் தற்காத்துக்கொள்ள முடியாமல் போனதை இந்திய அணிக்கு ஒரு பெரிய எச்சரிக்கை மணி. நம்மால் 350 ரன்களைத் தற்காத்துக் கொள்ள முடியவில்லை. இது ஒரு விழிப்புணர்வு மணி இல்லையா? இந்திய அணி பின்னோக்கிச் செல்வதாகவே நான் நினைக்கிறேன். இது ஒரு மிகப்பெரிய பின்னடைவு,” என்று கூறிய அவர், பந்துவீச்சுத் தாக்குதல் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த அன்ஷுல் கம்போஜ், குர்நூர் ப்ரார் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோரின் தேர்வு கேள்விகளை எழுப்புகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய பந்துவீச்சை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துவிட்டது. அவர்கள் உலகக்கோப்பையில் கூட பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற முன்னணி அணிகளை எதிர்கொள்வதை நினைத்துப் பாருங்கள்,” என்று விஹாரி கூறினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top