Times of Puducherry
புதுவை வில்லியனூர் காவல்நிலைய எல்லைக்குட் பட்ட பகுதியில் சப்&-இன்ஸ் பெக்டர் திருமுருகன் தலைமை யில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாமியார்தோப்பு பகுதியில் மர்ம நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடைப்படையில் சப்&-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது, சாமியார்தோப்பு பள்ளிவாசல் வீதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மநபர்கள் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடி யாக உள்ளே சென்று மர்ம நபர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வில்லியனூரை சேர்ந்த ரமேஷ் (எ) சிங்கார ரமேஷ் (வயது 43), ஐயப்பன் (வயது 28), பூரசன் (வயது 28), கார்த்திகேயன் (வயது 27), அன்பரசன் (வயது 28), விஜய் (வயது 29), கணுவாப்பேட்டை சேர்ந்த சந்துரு (வயது 25), வில்லியனூரை சேர்ந்த விஜய் (வயது 28), விமல் (வயது 21) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 9 பேரை போலீசார் வழக்குபதிந்து அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம், 9 செல்போன், 3 பைக் மற்றும் சீட்டுக்கட்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.