Times of Puducherry

வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை மோதிலால் நேரு தொழில் நுட்பக்கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்படுள்ளது

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
5 Oct 2026 • 4:48 PM
evm-secured-inspected-ele officer

புதுச்சேரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் பயன்படுத்தவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் லாஸ்பேட்டை மோதிலால் நேரு தொழில் நுட்பக்கல்லூரி வளாகத்தில் வாக்குச்சாவடி வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியால் இன்று காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

https://www.facebook.com/share/v/19UeVPXNoG/

அப்பொழுது, துணை மாவட்ட ஆட்சியர் தி.சுதாகர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top