Times of Puducherry

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் கைது

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
26 Oct 2026 • 5:19 PM
dmk-ex-minister-anbil-mahesh-arrested

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.100 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்ஸின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டார். இந்த நிலையில், சென்னை அமைந்தகரையில் இருந்த அன்பில் மகேஸை சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் திங்கள்கிழமை பிற்பகலில் கைது செய்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top