Times of Puducherry
திருச்சியில் தேர்தல் நேரத்தில் கூட பணி இடமாற்றம் செய்யப்படாத திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தற்போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, உள்துறைச் செயலர் ஏ.கார்த்திக் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜி-யாகப் பொறுப்பு வகித்து வந்த சந்தோஷ்குமார், சென்னை நந்தனத்தில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிவில் சப்ளை சிஐடி) ஐஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு ஐஜி-யாகப் பணியாற்றி வந்த ரூபேஷ் குமார் மீனா, திருச்சி மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த என்.காமினி, காவல் துறையின் நிர்வாகப் பிரிவு ஐஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல் துறையின் நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்த ஏ.ராதிகாவுக்கு புதிய பணியிடம் அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல் ஆணையராக கடந்த 2023 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற காமினி தொடர்ந்து 3 ஆண்டுகள் 10 மாதங்களைக் கடந்து திருச்சியில் வெகு நீண்ட காலம் பணி ஆற்றிய காவல் ஆணையர் என்ற பெருமையுடன் பணியிட மாறுதலில் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.