Times of Puducherry
திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில்வருவாய் துறையின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள்,நகர்ப்புற மேம்பாட்டு மைய தலைவர் குப. கிருஷ்ணன், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழ்நாட்டின் கடன் சதவீதம் 21 சதவீதம் குறைந்துள்ளது குறித்து நிதியமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். ஒவ்வொரு திட்டத்தையும் சரிபார்த்து, அதன் மதிப்பீடுகளைக் குறைத்து, முறையாகச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் கூடுதல் வருவாயை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திமுக ஆட்சிக் காலத்தில் மழைநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் தான் தற்போது மழை நீர் வேகமாக வடிய முடிந்தது என்று முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூறியதற்கு பதில் அளித்து பேசும்போது, ஒவ்வொருவரும் தங்களது ஆட்சிக் காலத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை உள்ளது. தற்போது நாங்கள் கடந்த நான்கு மாதங்களில் அந்தப் பணிகளை மேலும் வேகப்படுத்தி, விரைவாக முடித்திருக்கிறோம்.
முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியவர்கள் கைது செய்யப்பட்ட அரசியலில் நாகரிகம் என்பது மிகவும் முக்கியமானது. திராவிட இயக்கத்தின் வழியில் வந்தவர்கள், அண்ணாவின் வழியிலும், புரட்சித்தலைவரின் வழியிலும் செயல்படும்போது, காலத்திற்கு ஏற்ற வகையில் கண்ணியமான பேச்சுகளைக் கடைப்பிடிப்பது அவசியம். இதற்கு ஆதரவளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியும், திமுகவும் ஒன்றுதான்.
ஒவ்வொரு துறையும் ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வரின் அறிவுறுத்தலின்படி செய்து வருகிறோம்.மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பட்டா போன்றவற்றை விரைவாக கொடுப்பதற்கு அறிவுறுத்தி உள்ளோம். 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும் அந்தப் பணிகளை விரைந்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.வருகிற நவம்பர் மாதத்திற்குள் பெரும்பாலான பட்டாக்கள் வழங்க நடவடிக்கை மாவட்ட கலெக்டர் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு ரேகை சரியாக பதியவில்லை என்று குறைபாடு உள்ளது. அதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு மூன்று மாத காலமாக என்ன பணிகளை நிறைவேற்ற வேண்டுமோ அதனை செய்து கொண்டிருக்கிறோம். சென்னை மாநகராட்சி பொருத்தவரை 15 மண்டலங்களாக பிரித்து 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 7 அமைச்சர்கள் குழுவை அமைத்து குழுவின் மூலமாக முதலமைச்சர் ஆய்வு பணிகளை என்ன நடைபெற்று இருக்கிறது என்பதை ஆய்வு செய்கிறோம். இயற்கை பாதித்தபோது அதனை பாதுகாப்பது கடமை.
ஐந்தாண்டு திமுக காலத்தில் பணிகள் முடிக்கப்படவில்லை மூன்று ஆண்டுகளில் தமிழக வெற்றிக்கழக அரசு தான் மழை நீர் பணியை விரைவாக முடித்து வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.