Times of Puducherry
புதுச்சேரி எல்லையம்மன் தேவஸ்தானம் ஆலய திருப்பணிக்கு முதல் தவணையாக ரூபாய் 15 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் ரங்கசாமி இன்று திருப்பணி நிர்வாக அதிகாரி காமராஜரிடம் வழங்கினார்.
புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள அருள்மிகு எல்லையம்மன் தேவஸ்தானம் ஆலய திருப்பணிக்கு முதல் தவணை தொகையாக ரூபாய் 15 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் ரங்கசாமி அலுவலகத்தில் தற்காலிக சட்டப்பேரவை தலைவரும் உப்பளம் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் முன்னிலையில் ஆலய திருப்பணி நிர்வாக அதிகாரி காமராஜ், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் Dr. மணிகண்டன், சுரேஷ், அரசு வழக்கறிஞர் ராஜு, கணக்காளர் சுப்பிரமணியம் ஆகியோரிடம் வழங்கினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.