Times of Puducherry

முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் விதவையர் வாரிசுகளுக்கு ஊக்குவிப்புத் தொகையை அமைச்சர் ராஜசேகரன் வழங்கினார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
22 Oct 2026 • 12:37 PM
ex-service-family-students-and-widowers-incentive-rajasekar-awards

புதுச்சேரி முப்படை நலத்துறை மூலமாக புதுச்சேரி அரசு பல்வேறு நலத்திட்டங்களை முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் விதவையர்களுக்கு செய்து வருகிறது. அந்த நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த கல்வி ஆண்டு 2025-26-, 10-வது (SSLC/CBSE) மற்றும் 12-வது (State/CBSE) பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த, பல்கலை கழக அளவில் தங்க பதக்கம் வென்ற மற்றும் தேசிய/சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஊக்குவிப்புத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்குவதற்கான நிகழ்ச்சி இன்று நடைப் பெற்றது.

சட்டமன்றத்தில் உள்ள முப்படை நலத்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முப்படை நலத்துறை அமைச்சர் GNS.ராஜசேகரன், அவர்கள் 11 தகுதியான மாணவ மாணவிகளுக்கு ஊக்குவிப்புத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாரட்டினார்.

முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் விதவையர் வாரிசுகளுக்கு ஊக்குவிப்புத் தொகையை அமைச்சர் ராஜசேகரன் வழங்கினார்
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top