Times of Puducherry
தோள்பட்டையில் அதிக வலி ஜிப்மரில் கிரையோஅனல்ஜிசியா பிரிவு இன்று தொடங்கப்பட்டது இதனால் நாள்பட்ட வலி குறைக்க வழி வகை செய்யப்படும். ஜிப்மர் மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைத் துறை, நோயாளிகளுக்கான சிறப்பு வலி மேலாண்மை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மேம்பட்ட கிரையோஅனல்ஜீசியா (Cryoanalgesia) பிரிவை தொடங்கியுள்ளது.
ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சாகா வினோத் குமார் தொடங்கி வைத்தார். மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சத்யன் பரிதா, சென்னையைச் சேர்ந்த வலி மேலாண்மை மருத்துவர் டாக்டர் பிரேம் குமார், துறை பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கிரையோஅனல்ஜீசியா என்பது இலக்கு வைக்கப்பட்ட நரம்புகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட குளிரூட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வலி உணர்வுகளை குறைக்கும் . குறைந்தபட்ச ஊடுருவும் வலி மேலாண்மை முறையாகும். குறிப்பிட்ட நரம்புகளின் வலி சமிக்ஞைகளை கடத்தும் திறனை தற்காலிகமாகவும் கட்டுப்படுத்தப்பட்ட முறையிலும் குறைப்பதன் மூலம், தகுந்த முறையில் தேர்வு செய்யப்படும். நோயாளிகளுக்கு நீடித்த வலி நிவாரணத்தை வழங்குவதற்கு இம்முறை உதவுகிறது.
இதன் மூலம் நோயாளிகளின் செயல்திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும். புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்தப் பிரிவு, நீண்டகாலமாகத் தொடரும் சிக்கலான வலி பாதிப்புகளைக் கொண்ட குறிப்பாக மேம்பட்ட குறைந்தபட்ச ஊடுருவும் வலி மேலாண்மை சிகிச்சை மூலம் பயனடையக்கூடிய நோயாளிகளுக்கு சேவை வழங்கும். மருந்து சிகிச்சை, மருத்துவ நடைமுறைகள் மற்றும் பிற இடையீட்டு சிகிச்சை முறைகளை உள்ளடக்கிய துறையின் தற்போதைய ஒருங்கிணைந்த வலி மேலாண்மை சேவைகளுடன் இணைந்து செயல்படும்.
ஜிப்மரில் கிரையோஅனல்ஜீசியா அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், கடினமான மற்றும் நீண்டகால வலி பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகளுக்குக் கிடைக்கும் . இதன் மூலம் சிறப்பு மருத்துவம், அறிவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட மருத்துவப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்குவதில் ஜிப்மரின் தொடர்ச்சியான பங்களிப்புமேலும் வலுப்பெற்றுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சாகா வினோத் குமார், மேம்பட்ட சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜிப்மரில் சிறப்பு நோயாளி பராமரிப்பு சேவைகள் மேலும் வலுப்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார். நோயாளிகளுக்குக் கிடைக்கும் சிகிச்சையின் தரத்தையும், சிகிச்சை வாய்ப்புகளின் வரம்பையும் மேம்படுத்துவதில் பொருத்தமான நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
கிரையோஅனல்ஜீசியா பிரிவு தொடங்கப்பட்டிருப்பது, பல்துறை மற்றும் மேம்பட்ட வலி மேலாண்மையில் ஜிப்மரின் மருத்துவத் திறன்களை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு முக்கிய முன்னேற்றமாகும். இதன் மூலம், மூன்றாம் நிலை மருத்துவ மற்றும் கல்வி நிறுவனமான ஜிப்மரில் நோயாளிகளுக்கு நவீன குறைந்தபட்ச ஊடுருவும் வலி மேலாண்மை சிகிச்சை வாய்ப்புகள் கிடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.