Times of Puducherry
தட்டஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை செவ்வாய்க்கிழமை நடக்கிறது இதையொட்டி துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விடுகின்றனர் 31 வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்க அனைத்து ஏற்படும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் அதிகாரியும் கலெக்டர்மான குலோத்தங்கன் தெரிவித்தார்.
வெயில் கொளுத்துவதால் வாக்களிக்க வரும் பொதுமக்கள் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கூறினார். வாக்குச்சாவடி வசதி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வாக்குச்சாவடிக்குள் செல்ல சாய்வுதள வசதி மற்றும் சக்கர நாற்காலிகளும், கர்ப்பிணி பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் நிற்பதை தடுக்க நேரடி முன்னுரிமை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி, மின்சார வசதி, மருத்துவ முதலுதவி உபகரணங்கள், தற்காலிகபந்தல்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி தலைமை அதிகாரியை தவிர வேறு எந்த நபரும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் போனை ஒப்படைக்க தன்னார்வலர்கள் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் குழந்தைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரவேண்டாம். வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள ஈர துண்டு எடுத்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.