Times of Puducherry

முதலமைச்சர் சென்னை மாநகராட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரிப்பன் மாளிகையை ஆய்வு நடத்தினார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
18 Oct 2026 • 11:35 PM
cm-vijay-visited-ribbon-building

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரிப்பன் மாளிகைக்கு (Ribbon Building) நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்குப் பருவமழையை ஒட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் (Integrated Command and Control Centre) முதல்வர் இந்த ஆய்வை நடத்தினார்.

முதலமைச்சர் சென்னை மாநகராட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரிப்பன் மாளிகையை ஆய்வு நடத்தினார்

சென்னையில் நேற்று பல இடங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறுப்பு அமைச்சர்களாக
நியமிக்கப்பட்டுள்ள 8 பேர் உடனடியாக சென்னை வருமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகரின் 15 மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மீட்பு பணிகளை விரைவுபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க அமைச்சர்களுக்கு தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதன்படி சென்னையில் வெள்ள நிவாரண முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஒருங்கிணைப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

த.வெ.க. அமைச்சர்களான அருண்ராஜ், ரமேஷ், விக்னேஷ், விஜய் பாலாஜி, லோகேஷ் தமிழ்செல்வன், பிரபு, தமிழன்பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூர் மற்றும் மணலிஅமைச்சர் ரமேஷ், தண்டையார்பேட்டை மற்றும் மாதவரம் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் அமைச்சர் அருண்ராஜ் அம்பத்தூர், அண்ணா நகர் மற்றும் தேனாம்பேட்டை அமைச்சர் விஜய பாலாஜி கோடம்பாக்கம் மற்றும் வலசரவாக்கம் அமைச்சர் பிரபு, ஆலந்தூர் மற்றும் அடையார் அமைச்சர் விஜய், தமிழன் பார்த்திபன், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் அமைச்சர் விக்னேஷ் இவர்கள் அனைவரும் உடனடியாக சென்னை திரும்பி, மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top