Times of Puducherry

கழிவுநீர் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் - விக்னேஷ் கண்ணன் கோரிக்கை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
18 Oct 2026 • 6:40 PM
desilt-sewage-drain-vignesh-kannan-petition-to-governor

பருவமழை தொடங்கும் என்று தெரிந்தும் வாய்க்கால் தூர்வார்தல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் உள்கட்டமைப்பு பணிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் வகையில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை திமுக சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்:

காலநிலை மாற்றத்தால் வெயில் அடித்தாலும் அதிகமாகவும், மழை பெய்தாலும் அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் பருவ மழை தொடங்குவதற்கு முன்பு நகர பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், என அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் ஆனால் அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பெய்த மழையால் நகரப்பகுதி முழுவதும் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள், அரசுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் மெத்தனமாக இருந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து மக்கள் பணி செய்யும் தன்னை நடிப்பதாக விமர்சனங்கள் எழுப்புகிறார்கள் மக்கள் பணி செய்வது நடிப்பது என்றால் அந்த நடிப்பை தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பேன் அதில் சூப்பர் ஸ்டாராக இருப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

ராஜ் பவன் தொகுதிக்கு உட்பட்ட வைத்திகுப்பம், குருசுக்குப்பம், வாழைக்குளம், கணேஷ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், சட்டமன்ற உறுப்பினர் அடங்கிய அதிகாரிகளின் கூட்டத்தை உடனடியாக கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top