Times of Puducherry
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபப் பெருவிழாவை முன்னிட்டு அறநிலை துறை அமைச்சர் ரமேஷ், பொதுப்பணித்துறை, விளையாட்டுத்துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இணைந்து திருவண்ணாமலை கோவிலில் விரிவான ஆலோசனை செய்யப்பட்டது.
கார்த்திகை தீபத்திற்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கிரிவலப் பாதையில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், திருக்கோயிலில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டோம். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரிவான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
ஆய்வின்போது, பக்தர்களுடன் இணைந்து அன்னதானத்தில் பங்கேற்று உணவு அறிந்தனர் அதன் தரத்தையும் ஆய்வு செய்தனர் மேலும், உள்ளூர் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. எதிர்காலத்தில் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையைக் கருத்தில் கொண்டு, கிரிவலப் பாதை மேம்படுத்துதல், தங்குமிட வசதிகள், குடிநீர், கழிவறைகள், உணவுக் கூடங்கள் மற்றும் அன்னதானத் திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட நீண்டகாலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வுகளைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.
முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, திருக்கோயில்களுக்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். பக்தர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் ஆன்மிக அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், வரும் ஐந்து ஆண்டுகளிலும் தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் தேவையான வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
கார்த்திகை தீபப் பெருவிழா சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.