Times of Puducherry

கார் சாம்பியன்ஷிப் 2026-ன் "துபாய் 700 கி.மீ." பந்தயத்தில் புதுச்சேரி சேர்ந்த ஹேமச்சந்திரன் பங்கேற்ப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
18 Oct 2026 • 5:12 PM
hemachandren-participating-in-dubai-700-km-race

வருகின்ற அக்டோபர் 24, 25 தேதிகளில் துபாயில் நடைபெறும் கார்ட்ரோம் எண்டியூரன்ஸ் கார் சாம்பியன்ஷிப் 2026-ன் “துபாய் 700 கி.மீ.” பந்தயத்தில் புதுச்சேரி சேர்ந்த ஹேமச்சந்திரன் பங்கேற்கிறார். இவரை தட்டான்சாவடி தொகுதி என் ஆர் காங்கிரஸ் எம் எல் ஏ அசோக் ஆனந்த் பாராட்டினார்.

தேசிய அளவில் பங்கேற்கும் முதல் புதுச்சேரி கார் பந்தய வீரரும், தேசிய கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் புதுச்சேரி வீரரும்
இவரே என அவரது அணி தெரிவித்துள்ளது.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் விளையாட்டு அமைப்பான FMSCI-யின் கீழ், மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC) மற்றும் எம்ஆர்எஃப் ரேசிங் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன.

அக்டோபர் 24, 25 தேதிகளில் நடைபெறும் துபாய் கார்ட்ரோம் எண்டியூரன்ஸ் சாம்பியன்ஷிப் 2026-ன் இரண்டாவது சுற்றான “துபாய் 700 கி.மீ.” பந்தயத்தில் ஹேமச்சந்திரன் பங்கேற்கிறார். இந்தச் சர்வதேச எண்டியூரன்ஸ் கார்ட்டிங் பந்தயத்தில் அவர் கிரிட் தியரி மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணிக்காகக் களமிறங்குகிறார். சர்வதேசப் பந்தய வடிவில் பங்கேற்கும் முதல் புதுச்சேரி நபர் இவரே என அவரது அணி தெரிவித்துள்ளது.

“புதுச்சேரியை தேசிய மற்றும் சர்வதேசப் பந்தயத் தடங்களில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.
மீதமுள்ள பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று சாம்பியன்ஷிப்பை வெல்ல ஸ்பான்சர்களைத் தேடி வருகிறேன், என்றாவது ஒருநாள் சர்வதேசப் பந்தயங்களில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே எனது இறுதிக் கனவு. புதுச்சேரியின் எதிர்காலக் குழந்தைகளுக்கு மோட்டார் விளையாட்டில் பயிற்சி அளிக்கவும் விரும்புகிறேன்” என்று ஹேமச்சந்திரன் தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top