Times of Puducherry

இந்திய அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி ஆரோவிலுக்கு பார்வையிட்டு தியானம் செய்தார் 

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
18 Oct 2026 • 10:53 PM
attorney-general-venkataramani-visited-auroville

மாத்ரிமந்திர் ஏரித் திட்டத்தையும் தோட்டங்களையும் பார்வையிட்டார். நகர மேம்பாடு, முழுமைக் கல்வி (Integral Education) ஆகியவற்றில் ஆரோவில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் அவர் கூறுகையில்

ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் மரபுடனான தனது தொடர்பு சிறுவயதிலேயே தொடங்கியது என்று ஐந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது, ஆசிரமத்தின் பால்கனியிலிருந்து அன்னை தரிசனம் அளித்ததைக் கண்டதாகக் கூறினார். இது எனக்கு தொழில்முறை வாழ்விலும் தொடர்ந்தது. 1980களின் தொடக்கத்தில் ஆசிரமம் தொடர்பான வழக்குகளில் பணியாற்றியபோது, தனது முதல் மகனுக்கு அரவிந்த் என்று பெயரிட்டேன்

“ஒரு மகான் கண்ட உன்னதக் கனவுக்காக யாரால் எதைச் செய்ய முடியுமோ, அதை நான் செய்வேன்,” என்று அவர் கூறினார்.
ஆரோவில் நகர மேம்பாட்டுக் கவுன்சிலின் (ATDC) ஜெயா அவர்களையும், ஆரோவில் செயற்குழுவின் (Working Committee) அருண் அவர்களையும் சந்தித்தார். யூனிட்டி பெவிலியனைச் சேர்ந்தவரும், ஆரோவில் கனெக்ட் இதழின் ஆசிரியரும், ஐ.நா. நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) மற்றும் முழுமை யோகம் குறித்த நூலாசிரியருமான ப்ரீத்தி தினமணி தலைமை ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களுடனும் நேரம் செலவிட்டார்.

செயற்குழு மற்றும் ATDC உறுப்பினர்கள் அவரை மாத்ரிமந்திர் ஏரித் திட்டத்துக்கும் அதன் தோட்டங்களுக்கும் அழைத்துச் சென்றனர்.
குஜராத் கூடுதல் தலைமைச் செயலாளரும், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி தலைமையில் அடைந்துள்ள வளர்ச்சியையும் விளக்கினர்.

ஸ்ரீ அரவிந்தர் சர்வதேசக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் (SAIIER) நடைபெறும் கல்வி மேம்பாடு மற்றும் முழுமைக் கல்வி குறித்தும் அவர் அறிந்துகொண்டார். இந்தக் கல்வி, கற்பவரின் உடல், உயிர், மனம், ஆன்மிக வளர்ச்சியை வளர்க்கிறது.

பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழும் ஆரோவில், ஐ.நா. நிலையான வளர்ச்சி இலக்குகளுடனும், “வசுதைவ குடும்பகம்” (உலகமே ஒரே குடும்பம்) என்ற இலட்சியத்துடனும் இணைந்து செயல்படுவதைக் குடியிருப்பாளர்கள் எடுத்துரைத்தனர். ஆரோவிலின் “18ஆவது இலக்கு” எனப்படும் உணர்வுபூர்வமான மாற்றத்தை உருவாக்குபவர் (Change-maker) குறித்தும் பேசினர்.

மாத்ரிமந்திரின் குறியீடுகளையும் விளக்கினர்: ஆர்வத்தைக் குறிக்கும் வெளிர்நீல முக்கோணம், வெளிப்பாட்டைக் குறிக்கும் சிவப்புச் சதுரம், இணக்கத்தைக் குறிக்கும் இளஞ்சிவப்பு வட்டம், அதிமனதைக் குறிக்கும் பொன்-ஆரஞ்சு அறுகோணம். அமைதியான சமுதாயத்தில் ஒவ்வொருவரும் பயனுள்ளவராகவும் தேவைப்படுபவராகவும் இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் விவரித்தனர்.

எளிய கருத்துகளின் ஆற்றல் குறித்துப் பேசிய திரு. வெங்கடரமணி, சிலர் புதிய முறையில் சிந்திக்கத் தொடங்கினால் அந்தக் கருத்து பரவும் என்றார். “நாம் முயன்று பார்க்க வேண்டும், அவ்வளவுதான்,” என்று அவர் கூறினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top