Times of Puducherry
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மேற்கொண்ட கண்காணிப்பின்படி தற்போது பரவி வரும் வைரஸ் பருவகால இன்புஃளுயன்சா A( H1N1) வைரசாகவே உள்ளது. புதிய அல்லது அசாதாரண மரபணு மாற்றங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. பெரும்பாலான தொற்றுகள் லேசானவை மற்றும் தானாகவே குணமடைய கூடியவை. எனவே விழிப்புடன் இருப்பது அவசியம் என்றாலும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை .
தொற்று பொதுவாக திடீரென்று கீழ்க்கண்ட அறிகுறிகளுடன் தொடங்கலாம். அதிக காய்ச்சல், குளிர், நடுக்கம், தொடர்ந்து காணப்படும் வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலி, கடுமையான தசை வலி மற்றும் உடல் சோர்வு, தலைவலி, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகமாக காணப்படும் அறிகுறிகளான குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஆகும்.
இன்புஃளுயன்சா என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும். ஆன்டிபோட்டிக் மருந்துகள் வைரஸ்களை அழிக்காது, வைரஸ் தொற்று அதிகரிக்கும் காலங்களில் மருத்துவர்கள் ஆலோசனை இன்றி ஆண்ட்டிபாடிக் மருந்துகளை தேவை இன்றி பயன்படுத்துவது உடலில் உள்ள பயனுள்ளநுண்ணுயிரிகளை பாதிப்பதுடன், ஆன்ட்டி மைக்ரோபியல் எதிர்ப்பு (antimicrobial resistance) உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.ஆகவே தகுதியான மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ அறிகுறிகள் மற்றும் தேவையான ஆய்வக பரிசோதனைகளின் அடிப்படையில் இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்று இருப்பதாக உறுதி செய்தால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஒசல்டமிவீர் போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மருத்துவரின் பரிந்துரை மற்றும் கண்காணிப்பின் கீழ் குறிப்பிட்ட மருத்துவ நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை சுயமாக உட்கொள்ள வேண்டாம்.
சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத் திணறல் அல்லது மிக வேகமாக சுவாசித்தல் மார்பு வலி அல்லது தொடர்ந்து மார்பில் அழுத்தம் ஏற்படுதல், உதடுகள் அல்லது விரல்கள் நீல நிறமாக மாறுதல், இரும்பும் போது ரத்தம் கலந்த சளி வெளியேறுதல், அதிக தூக்க நிலை, குழப்பம், இயல்புக்கு மாறாக ஆழ்ந்த மயக்கம் அல்லது வலிப்பு, தொடர்ந்து வாந்தி ஏற்பட்டு, வாய் வழியாக திரவங்களை உட்கொள்ள முடியாத நிலை இதுபோன்ற ஏதேனும் ஏதேனும் ஆபத்தான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அவசர சிகிச்சை மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
குழந்தைகளுக்கு உணவு அல்லது பால் உட்கொள்ள முடியாமல் இருத்தல், அதிக சோர்வு அல்லது மந்த நிலை, மூச்சு விடும் பொழுது குறட்டை போன்ற சத்தம், மார்பு பகுதி கடுமையாக உள்இழுத்தல், மார்பு இருக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். ஆகவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் மருத்துவரின் ஆலோசனை படியே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி சுயமாக மருந்துகள் உட்கொள்ள வேண்டாம்.
இன்புஃளுயன்சா A( H1N1) தொற்றின் பெரும்பாலான நிலைகள் லேசானவை மற்றும் குணமடைய கூடியவை. ஆனால் ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். வருமுன் காப்பதே நலம் ஆகவே கைகளை சுத்தமாக வைத்திருத்தல், அவசியம் சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தி குறைந்து குறைந்தது 20 வினாடிகள் கைகளை அடிக்கடி நன்கு கழுவ வேண்டும். சோப்பு மற்றும் தண்ணீர் கிடைக்காத நிலைகளில் ஆல்கஹால் அடிப்படையான சானிடைசர் பயன்படுத்தலாம்.
இரும்பும் போதும் தும்பும் போதும் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் வாய் மற்றும் மூக்கை மூட வேண்டும், டிஷ்யூ கிடைக்காத போது முழங்கை உட்புற பகுதியை பயன்படுத்தி வாய் மற்றும் மூக்கை மூட வேண்டும். அதிக மக்கள் கூடும் மற்றும் காற்றோட்டம் குறைந்த மூடிய இடங்களில் முறையாக பொருத்தக்கூடிய முக கவசம் அணிவது பரிந்துரைக்கப்படுகிறது. காய்ச்சல் ஏற்பட்டிருந்தால், காய்ச்சலை குறைக்கும் மருந்துகளை பயன்படுத்தாமல் குறைந்தது 24 மணி நேரம் காய்ச்சல் இல்லாத நிலை ஏற்பட்ட பின்னரே பள்ளி, பணியிடம் மற்றும் சமூக கூட்டங்களுக்கு செல்ல வேண்டும். உடல்நிலை சரியில்லாத போது மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்ப்பது தொற்று பரவலை குறைக்க உதவும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செவ்வேள் செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.