Times of Puducherry
நாட்டு வெடி வெடிக்க வைத்து இன்ஸ்ட்டாகிராமில் வீடியே பதிவிட்ட இரண்டுபேரை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரபு, 20; இவரும், வழுதரெட்டியை சேர்ந்த மாதவன், 19; என்பவரும், வழுதரெட்டி சுடுகாடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நாட்டு வெடி வெடிக்க வைத்து பாட்டுப்பாடி மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
அந்த வீடியோவை தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வெடி குண்டு போடுவது, சமூக வளைதலங்களில் இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் பிரபு, மாதவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.