Times of Puducherry
வாக்குத்திருட்டு என்றால் என்ன என்று தெரியாமலே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மீது குற்றம் சாட்டி வருவதாக புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்:
காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் எஸ்.ஐ.ஆர் பற்றியும் தலைமை தேர்தல் ஆணையர் மீதும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள், இந்த குற்ற சட்டை தான் அவர்கள் வாக்கு திருட்டு என்று கூறுகிறார்கள்.
வாக்கு திருட்டு என்றால் அவர்களுக்கு என்னவென்றே தெரியாது, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளது. எஸ்.ஐ.ஆர் திருத்தத்திற்கு பிறகு கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி பிடித்திருக்கிறது.
அந்த மாநிலங்களில் வாக்கு திருட்டு நடைபெறவில்லையா? என்று கேள்வி எழுப்பிய செல்வகணபதி, இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள், இதுவரை எத்தனை பேர் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று கூறி இருக்கிறார்கள் என்றும் வாக்காளர்கள் எந்தவித ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்காத காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் வாக்குத்திருட்டு என்று பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தவும், இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும் செல்வகணபதி குற்றம் சாட்டியுள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.