Times of Puducherry
புதுச்சேரியில் ஏனாம் புயல் பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி ஏனாமில் புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை வந்த பிறகு, அது சம்பந்தமாக தகுந்த முடிவெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் புயல் பாதிப்பு நிலவும் பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, அவர்களுக்குத் தேவையான உணவு வழங்குவது உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் தொடர்ந்து செய்து கொடுத்து வருகிறார்கள் என்றும், பாதுப்புகள் குறித்த கணக்கெடுப்பு வந்த பிறகு நிவாரணம் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.