Times of Puducherry
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் மதுபானைக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், துவாக்குடியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு சென்று மனு அளித்தனர். அந்த மனுவில், செங்குறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மதுபானக்கடை அமையவிருக்கும் சாலையை கடந்துதான் பள்ளி குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்கும், பெண்கள் வேலைக்கும் சென்று வருகின்றனர். இங்கு மதுபானைக் கடை அமைந்தால் பெண்கள், சிறார்கள் உள்ளிட்ட செங்குறிச்சி கிராம மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.
எனவே, கிராம மக்களின் நலன் கருதி செங்குறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.