Times of Puducherry
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட சுப்பையா நகர் பகுதியில், புதைவட மின் பாதையில் ஏற்பட்ட பழுது காரணமாக 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
மின் பாதையில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்து மீண்டும் வழக்கமான மின் விநியோகத்தை வழங்குவதற்கான பணிகள் நடைபெறும் நிலையில், பொதுமக்கள் நீண்ட நேரம் மின்சாரம் இன்றி சிரமப்படுவதை அறிந்த தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.
இதையடுத்து, பழுதைச் சரிசெய்யும் பணிகள் நிறைவடையும் வரை பொதுமக்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில், தனது சொந்த செலவில் பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் தனித்தனியாக மின் இணைப்புகள் வழங்க ஏற்பாடு செய்தார்.
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, அவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் உடனடியாகச் செயல்பட்ட எம்.எல்.ஏ. அசோக் ஆனந்தின் இந்த நடவடிக்கை அப்பகுதி நன்றி தெரிவித்துக் கொண்டனர் .
பொதுமக்களின் பிரச்சினைகளை அறிந்து, அவர்களின் தேவைகளுக்கு உடனடியாக உதவுவது தனது கடமை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் செயல்பட்டுள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.