Times of Puducherry

தட்டாஞ்சாவடி தொகுதியில் அங்கன்வாடிகளை மேம்படுத்த நடவடிக்கை – எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் ஆலோசனை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
28 Oct 2026 • 6:40 PM
measures-to-improve-anganwadi-centres-in-thattanchavdy-consitutency-mla

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை மேம்படுத்துவது தொடர்பாக, தட்டாஞ்சாவடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த், பொதுப்பணித்துறையின் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் செயற்பொறியாளர் வைத்தியநாதன் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களின் கட்டிட வசதிகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்தும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்குவது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களின் தேவைகளைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top