Times of Puducherry

'அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டம்'புதுச்சேரியில் அமல்படுத்த கோரிக்கை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
28 Oct 2026 • 7:04 PM
ambedkar-overseas-scholarship-scheme-should-implementation-in-puducherry

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தலைமையில் காரைக்காலில ஆலோசனைக் கூட்டம் – அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த கோரிக்கை. தேசிய மக்கள் முன்னணி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சுவாமிநாதன் முன் வைத்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ராஜவேலு அவர்கள் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு அமைப்பு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கெடுத்து தங்கள் கருத்தை பதிவிட்டனர் . தேசிய மக்கள் முன்னணி சார்பில் பொதுச் செயலாளர் இன்னாசிராக், செயலாளர் டேவிட் ஜோசப், தேசிய மக்கள் முன்னணி & புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சீ.சு.சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகள்:

1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் அடிப்படை       பிரச்சினைகள் பல விவாதிக்கப்பட்டது
2. கல்லூரி மாணவர்களின் கல்வி உதவித்தொகை நிலுவை
3. மாணவர் விடுதிகளின் தரம் மற்றும் உணவு, கட்டமைப்பு வசதிகள் குறைபாடு போன்ற பல தகவல்கள் விவாதிக்கப்பட்டது

இக்கூட்டத்தில் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சுவாமிநாதன் கூறுகையில்:

அண்டை மாநிலமான தமிழகத்தில் முந்தைய திமுக அரசு ஆதிதிராவிட மாணவர்களுக்கு அயல்நாடு உயர்கல்விக்காக , ‘அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டம்’ சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் அயல் நாடுகளில் உயர்கல்வி பயில முழு செலவையும் அரசே ஏற்கிறது.

அதே போன்ற ஒரு திட்டத்தை புதுச்சேரி மாநிலத்திலும் அறிவிக்க வேண்டுமென எமது நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம் அத்திட்டத்தினை அரசு கொண்டுவர வேண்டும் இதன்மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்கால், மாஹே, ஏனாம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட மாணவர்கள் பயன் பெறுவார்கள். இது தான் சமூக நீதி. இது தான் அம்பேத்கருக்கு செய்யும் உண்மையான மரியாதை என்று வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கையை கேட்ட அமைச்சர் ராஜவேலு அவர்கள், இது தொடர்பாக அதிகாரிகளுடன் உரிய ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் அவர்களுக்கு தேசிய மக்கள் முன்னணி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று நம்புகிறோம் என பேசினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top